வெஜிடபிள் கேழ்வரகு அடை
சத்தான உணவு பொருட்களில் ஒன்றான கேழ்வரகை பயன்படுத்தி அடை ( Ragi In Tamil ) செய்து பார்க்கலாம் வாங்க :
Ragi In Tamil, How To Make Ragi Adai In Tamil
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு = 2 கப்
வெங்காயம் = 2 பீஸ்
குடமிளகாய் = 1 பீஸ்
கேரட் = 1 பீஸ்
பச்சை மிளகாய் = 2 பீஸ்
கறிவேப்பிலை = சிறிய கொத்து
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை : 1
முதலில் வெங்காயம், குடமிளகாய், கேரட், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையைத் தாளித்து, அதன் பிறகு அதில் நறுக்கிய கேரட், குடமிளகாய் ஆகியவற்றைப் போட்டு நன்கு வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கவும்.
செய்முறை : 2
இப்போது அதனுடன் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் கேழ்வரகு மாவை கொஞ்சம் கொஞ்சமாகப் நன்கு கிளறி அடைமாவு பதத்தில் வைக்கவும்.
செய்முறை : 3
இப்போது அடைமாவை சிறிதளவு எடுத்து தோசைக்கல்லில் ஊற்றி இருபுறமும் எண்ணெய் ஊற்றி நன்கு வேகவிட்டு எடுத்து, சூடாக பரிமாறவும்.
இப்போது சூடாக வெஜிடபிள் கேழ்வரகு அடை ( Ragi In Tamil ) ரெடி!!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...