அன்னாசி பழ சர்பத்
அன்னாசிப்பழத்தை பயன்படுத்தி ஜில்லென சர்பத் ( Pineapple Juice ) செய்து அசத்தலாம் வாங்க :
![]() |
Pineapple Juice, How To Make Pineapple sharbath Recipe |
தேவையான பொருட்கள் :
அன்னாசிப்பழம் = 1
சர்க்கரை = 1/2 கிலோ
தண்ணீர் = 1/2 லிட்டர்
சிட்ரிக் ஆசிட் = 1/2 ஸ்பூன்
அன்னாசி பிளேவர்
எசன்ஸ் = 1 ஸ்பூன்
செய்முறை : 1
முதலில் அன்னாசிப்பழத்தை தோல் சீவி தூண்டுகளாக நறுக்கிக் கழுவி சிறிது தண்ணீர்விட்டு, நன்கு வேகவிடவும். வெந்ததும் இறக்கி, ஆறவைத்து மிக்ஸியில் கூழாக அரைக்கவும். இதனுடன் சர்க்கரை, அன்னாசி பழத்தை வேக வைத்த தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும்.
செய்முறை : 2
இப்போது சிட்ரிக் ஆசிட் கலந்து அடுப்பில் வைத்து, கம்பிப் பதத்தில் இறக்கவும். பிறகு ஆற வைக்கவும்.நன்றாக ஆறிய பிறகு பழக்கூழ் மணம் சேர்த்துக் கலந்து, சுத்தமான பாட்டிலில் ஊற்றி, நன்கு மூடி வைக்கவும். தேவையானபோது தண்ணீர், எலுமிச்சை சாறு, ஐஸ் கட்டிகள் சேர்த்து கலந்து பருகவும்.
இப்போது ஜில்லென அன்னாசி சர்பத் ( Pineapple Juice ) ரெடி!!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...