பிரட் வடை
குழந்தைகளின் குட்டி பசியை போக்க பிரட் பயன்படுத்தி சுவையான வடை ( Bread Recipe In Tamil ) செய்து கொடுக்கலாம் வாங்க :
Bread Recipe In Tamil, Bread Recipes For Snacks
தேவையான பொருட்கள் :
பிரெட் = 5 பீஸ்
அரிசி மாவு = 1/2 கப்
சோடா மாவு = 1ஸ்பூன்
வெங்காயம் = 2 பீஸ்
பச்சை மிளகாய் = 2 பீஸ்
கறிவேப்பிலை= சிறிது
கொத்தமல்லி = சிறிது
இஞ்சி = சிறிய துண்டு
உப்பு = தேவையான அளவு
தண்ணீர் = தேவையான அளவு
எண்ணெய் = தேவையான அளவு
மிளகு = 5 பீஸ்
செய்முறை : 1
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்துமல்லித் தழை, கறிவேப்பிலை அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர், பிரெட்டில் நான்கு ஓரத்தை வெட்டி எடுத்துவிட்டு. பின்னர் அந்த பிரெட் துண்டுகளை நன்றாக மசித்து வைக்கவும்.
செய்முறை : 2
மசித்து வைத்த பிரட் வுடன் அரிசி மாவு, உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் தெளித்து நன்றாக வடை மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும். பிசைந்த மாவை மெதுவடை போன்று தட்டி வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பொறித்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சூடான சுவையான பிரெட் வடை ( Bread Recipe In Tamil ) தயார்!!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...