அரைக்கீரை கூட்டு
கீரை என்றாலே உடலுக்கு சத்து தரக்கூடிய, விட்டமின்கள் நிறைந்த அறிய உணவு பொருள். மருத்துவர்களின் அறிவுரையில் முதலில் வருவது கீரை வகைகளே,இத்தகைய கீரை வகைகளில் ஒன்றான அரைக்கீரையை பயன்படுத்தி கூட்டு ( Arai Keerai Kootu ) செய்து ருசிக்கலாம் வாங்க :
Arai Keerai Kootu, Arai Keerai Recipe
தேவையான பொருட்கள்:
அரைக்கீரை = 1 கட்டு
கடலைப்பருப்பு = 100 கிராம்
கடுகு = 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு = 1/2 ஸ்பூன்
வெங்காயம் = 2 பீஸ்
தேங்காய்த் துருவல் = 1/4 கப்பு
சீரகம் = 1/2 ஸ்பூன்
மிளகுத் தூள் = 1 ஸ்பூன்
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
செய்முறை : 1
முதலில் கடலைப் பருப்பை தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும். கீரையை நன்றாக ஆய்ந்து சுத்தமாக்கி,கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைக்கவும். கீரை வெந்ததும், ஊற வைத்த பருப்பையும் சேர்த்து வேக வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
செய்முறை : 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், சிறிது மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, கடைசியாக தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கி பரிமாறவும்.
இப்போது சுவையான, சத்தான அரைக்கீரை கூட்டு ( Arai Keerai Kootu ) தயார்!!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...