சோள பாயசம்
தித்திக்கும் பாயசம் ( Payasam Recipe ) ஈஸியாக செய்து ருசிக்கலாம் வாங்க :
Payasam Recipe, How To Make Payasam
சோள ரவை = 1 கப்
பாசி பருப்பு = 1/4 கப்
தூள் வெல்லம்= 1/2 கப்
ஏலக்காய் = 2 பீஸ்
பால் = 1/2 லிட்டர்
செய்முறை :
ரவையையும்,பாசிப்பருப்பையும் தனித்தனியாக லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீரில், முதலில் பருப்பை வேக வைக்கவும். பருப்பு பாதி வெந்த நிலையில், சோள ரவையைச் சேர்த்து வேக விடவும். சோள ரவை, பருப்பு இரண்டும் வெந்தவுடன் வெல்லத்தையும், ஏலக்காய் பொடி யையும் சேர்த்து, நன்றாக கிளறி சூடான பாலையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். சிறிது நேரம் கழித்து இறக்கி சூடாக பரிமாறவும்.
இப்போது சூடான சோள பாயசம் ( Payasam Recipe ) தயார் !!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...