துவரம்பருப்பு இட்லி
சாதாரண இட்லி போல் இல்லாமல் உடலுக்கு சத்து தரக்கூடிய பொருட்களை சேர்த்து சுவையான துவரம் பருப்பு இட்லி ( Idli Recipe ) செய்து ருசிக்கலாம் வாங்க :
Idli Recipe, How To Make Idli Batter,Ingredients Of Idli
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு = 150 கிராம்
எலுமிச்சைச்சாறு = 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் = 1/2 ஸ்பூன்
நெய் = 2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு = 50 கிராம்
வெந்தயக்கீரை = சிறிய கட்டு
பச்சரிசி = 50 கிராம்
பச்சை மிளகாய் = 4 பீஸ்
இஞ = 1 துண்டு
உப்பு = தேவையான அளவு
செய்முறை : 1
முதலில் துவரம் பருப்பு, பச்சரிசி, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஊற வைக்கவும். கொஞ்சம் சொரசொரப்பாக அரைத்து வைக்கவும்.கீரையைக் கழுவி, ஆய்ந்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
செய்முறை : 2
பிறகு அரைத்து வைத்த இட்லி மாவுடன் கீரை, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, எலுமிச்சைச் சாறு, மஞ்சள்தூள், நெய் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.இறுதியில் இட்லி மாவை இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சுடச்சுட துவரம்பருப்பு இட்லி ரெடி!!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...