கம்பு அடை
கம்பில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதால் நம் உணவில் அடிக்கடி சேர்த்துக்கோள்வது அவசியமாகிறது. அனைவரும் சாப்பிடவேண்டிய மற்றும் சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிடவேண்டிய கம்பை பயன்படுத்தி சுவையான அடை செய்து ருசிக்கலாம் வாங்க :
Adai Seivathu Eppadi, Recipe Of Adai
தேவையான பொருட்கள்:
கம்பு = 2 கப்பு அளவு
வெங்காயம் = 2 பீஸ்
கறிவேப்பிலை = 1/2 கப்பு
பச்சை மிளகாய்= 4 பீஸ்
உப்பு = தேவையான அளவு
செய்முறை : 1
முதலில் கம்பை ஊற வைத்து நன்கு கழுவி, உலர வைத்து சற்று ஈரமாக இருக்கும்போதே மிசின் அல்லது மிக்ஸில் அரைத்துக் கொள்ளவும். அரைக்கும்போது தண்ணீர் விடாமல், உப்பு மட்டும் சேர்த்து கெட்டியாக அரைக்க வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
செய்முறை : 2
அரைத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் சேர்த்து தண்ணீர் ஊற்றிப் பிசைந்து தயாராக வைக்கவும்.
செய்முறை : 3
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, கல் காந்ததும் பிசைந்த மாவை அடையாகத் தட்டி, சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
இப்போது சத்தான, சுவையான கம்பு அடை ரெடி!!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...