பாசிப்பருப்பு அடை
குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் சுவையான பாசிப்பருப்பு அடை ( Adai Recipe ) செய்யலாம் வாங்க :
Adai Recipe, Recipe For Adai Dosa, Adai Dosai Seivathu Eppadi
தேவையான பொருட்கள் :
பச்சரிசி = 1/2கப்
புழுங்கல் அரிசி = 1/2கப்
கடலை பருப்பு = 1 ஸ்பூன்
துவரம் பருப்பு = 1 ஸ்பூன்
முளைகட்டிய பயறு = 1/2கப்
கொண்டை கடலை =1/2கப்
முழு உளுந்து = 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் = 1/2 கப்
(பொடியாக நறுக்கியது )
கொத்தமல்லி = 1/4 கப்
தேங்காய் துருவல்= 1/2 கப்
காய்ந்த மிளகாய் = 4 பீஸ்
பெருங்காயம் = 1/2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
எண்ணெய் = தேவையான அளவு
அலங்கரிக்க:
கேரட் துருவல், தேங்காய் துருவல், கொத்தமல்லி
செய்முறை : 1
முதலில் அரிசி, துவரம்பருப்பு, கடலை பருப்பு, உளுந்து எல்லாவற்றையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பிறகு இதனை முளைகட்டிய பயறு, கொண்டைகடலை, மிளகாய், சோம்பு அல்லது பெருங்காயத்தோடு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
செய்முறை : 2
அறைத்தற்றுடன் வெங்காயம், கொத்தமல்லி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து சற்று தளர கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை காய வைத்து அதில் சிறிய சிறிய அடைகளாக ஊற்றி அதனை சுற்றிலும் நெய் அல்லது வெண்ணை அல்லது எண்ணை ஊற்றி இரு பக்கமும் வேக விட்டு எடுக்கவும்.
இப்போது சுவையான பாசிப்பருப்பு அடை ( Adai Recipe ) தயார்!!!
அதன் மேல் கேரட் துருவல், தேங்காய் துருவல், கொத்த மல்லியை வைத்து அலங்கரிக்கவும்.
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...