Menu

amazon.in

2022-10-28

மசாலா மஷ்ரூம்( காளான் ) Mushroom Masala Recipe, Mushroom Recipe

மசாலா மஷ்ரூம்( காளான் )

காளானை பயன்படுத்தி காரசாரமான மசாலா காளான் ( Mushroom Masala Recipe ) செய்து அசத்தலாம் வாங்க : 


மசாலா மஷ்ரூம்( காளான் ) Mushroom Masala Recipe, Mushroom Recipe
Mushroom Masala Recipe, Mushroom Recipe


தேவையான பொருட்கள் : 


காளான்            = 300 கிராம்

தயிர்                   = 1 கப்பு

 இஞ்சி,பூண்டு

பேஸ்ட்                =  2 ஸ்பூன் 

பச்சை மிளகாய் = 2 பீஸ்

முந்திரி              = 10 பீஸ் 

உலர் தேங்காய் பொடி = 2 ஸ்பூன் 

கசகசா               = 1/2 ஸ்பூன் 

தக்காளி             = 2 பீஸ் 

எண்ணெய்       = 4 ஸ்பூன் 

உப்பு                    = தேவையான அளவு

உலர் வெந்தய இலை  = 2 பீஸ் 

கொத்தமல்லி தழை    = சிறிய கட்டு 

வெங்காயம்     = 4 பீஸ் 

மிளகாய் தூள் = 2 ஸ்பூன்

மஞ்சள் தூள்    = 1/2 ஸ்பூன் 

கறி மசாலா பொடி = 1 ஸ்பூன் 


செய்முறை : 1


முதலில் வெங்காயத்தை பொடிதாக நறுக்கி, வெண் ணெய்யில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். மீதம் உள்ள பாதி வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.


செய்முறை : 2


அகலமான பாத்திரத்தில் சுத்தப்படுத்திய காளான், தயிர், இஞ்சி-பூண்டு விழுது, பொடி தாக நறுக்கிய பச்சை மிளகாய், உலர்ந்த வெந்தய இலை, கொத்தமல்லி தழை, நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறி மசாலா பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி 10 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்.


செய்முறை : 3


மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் பொடிதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கசகசா சேர்த்து சிறிது வதக்கவும். பின்பு அதில் முந்திரி பொடி, தேங்காய் பொடி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன் அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.


செய்முறை : 4


நன்றாக வதங்கியதும் அதில் ஊற வைத்த காளான் மசாலாவைக் கொட்டிக் கிளறவும். தண்ணீர் சேர்க்காமல் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேக விடவும். பின்பு சிறிது கொத்தமல்லி தழை மற்றும் முந்திரி பொடியை மேலே தூவி பரிமாறவும்.

இப்போது சுவையான மசாலா மஷ்ரூம் ( Mushroom Masala Recipe ) ரெடி!!!



Share this post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம் கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க  Uthappam Recipe, Recipe Of Onion ...