சிக்கன் சாப்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்த வகையில், சண்டே ஸ்பெஷல், சிக்கன் சாப்ஸ் ( Chicken Chops ) ஈசியாக, ருசியாக செய்து பார்போம் வாங்க :
தேவையான பொருட்கள் :
கோழிக்கறி = 750 கிராம் '
வெங்காயம் = 200 கிராம்
பூண்டு = 4 பீஸ்
மிளகாய்பொடி= 2 ஸ்பூன்
மஞ்சள்பொடி = 1 ஸ்பூன்
எண்ணெய் = 50 மில்லி
ஆப்ப சோடா = அரை ஸ்பூன்
உப்பு = தேவைக்கேற்ப
பட்டை, லவங்கம், சோம்பு = 20 கிராம்
நெய் = 50 மில்லி
இஞ்சி = 1 துண்டு
செய்முறை : 1
முதலில் கோழிக்கறியைச் சுத்தம் செய்து பாத்திரத்தில் வைத்து ஒரு லிட்டர் வரை தண்ணீர் விடவும். இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் இரண்டையும் சேர்த்து அடுப்பில் வைக்கவும். இவை கோதிக்க ஆரம்பித்தவுதும் ஆப்ப சோடாவைப் போடவும்.
செய்முறை : 2
பிறகு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். இஞ்சியைத் தோலைச்சீவி, பட்டை, லவங்கம், சோம்பு ஆகியவற்றைக் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கறி பாதி வெந்ததும் நறுக்கிய வெங்காயத்தில் பாதியும் உப்பையும் சேர்த்து கிளறி விடவும். கறி பதமாக வெந்ததும் இறக்கி வைக்கவும்.
செய்முறை : 3
அடுப்பில் வாணலியைப் வைத்து அதில் நெய் எண்ணெய் இரண்டையும் ஊற்றவும் இவை காந்ததும், மீதமுள்ள வெங்காயத்தைப் சேர்த்து அது சிவக்க வதங்கியதும் அரைத்த விழுதைப் சேர்த்து கிளறி அதில் வேகவைத்த கறியைப் சேர்த்து சுமார் பத்து நிமிடம் அடுப்பிலேயே வைத்து லேசாக கிளறவும்.பிறகு கீழே இறக்கி வைத்து பரிமாறவும்.
இப்போது சூடான, டேஸ்ட்டான சிக்கன் சாப்ஸ் ( Chicken Chops ) ரெடி!!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...