Menu

amazon.in

2022-09-03

வாழைப்பூ பிரியாணி banana flower recipes valaipoo briyani

 வாழைப்பூ பிரியாணி

சைவ பிரியர்களுக்கான வாழைப்பூ பிரியாணி ( banana flower )  வீட்டிலேயே எளிமையாக செய்து அசத்தலாம் வாங்க : 

வாழைப்பூ பிரியாணி banana flower recipes valaipoo briyani
 banana flower recipes valaipoo briyani


தேவையான பொருட்கள் : 

பச்சரிசி அல்லது

பாசுமதி அரிசி  = 2 கப்

வாழைப்பூ          = 1 கப்

எண்ணெய்        = 3 ஸ்பூன்

தயிர்                     = ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள்      = 1/4 ஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது  = 1 ஸ்பூன்

பட்டை, சோம்பு, பிரிஞ்சி இலை,

 கசகசா வறுத்துப் பொடித்தது  = 1ஸ்பூன்

வெங்காயம்               = 1 பீஸ்

மிளகாய்த் தூள்        =  1 ஸ்பூன்

எண்ணெய், உப்பு  = தேவையான அளவு 

அரைக்க :

தக்காளி      = 1 பீஸ்

பச்சை மிளகாய்  = 2 பீஸ் 

புதினா  இலை,

கொத்தமல்லி இலை  = சிறிதளவு 

தேங்காய்த் துருவல்  = 1/4 கப்

நெய்                        = 1 ஸ்பூன்

செய்முறை : 1

முதலில் வாழைப்பூவைத் தயிரில் போட்டு பத்து நிமிடம் தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அரிசியை தனியே வையுங்கள். அரைக்க வேண்டிய மசாலாப் பொருட்களை அரைத்துக்கொள்ளுங்கள். குக்கரில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், வாழைப்பூவை வதக்கிக் கொள்ளுங்கள்.

செய்முறை : 2

இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கி, மிளகாய்த் தூள், சேர்த்து அரைத்து  வதக்குங்கள்.விழுது  உப்புசேர்த்து, மூன்றுகப்தண்ணீர்விட்டுஅரிசி,மசாலாப் பொடிசேர்த்து நன்றாக மூடிவிடுங்கள். ஒரு முறை கலந்து குக்கரை விசில்வந்ததும் இறக்கி வையுங்கள். குக்கரைத் திறந்து நெய்யில் வறுத்த முந்திரியைத் தூவிப் பரிமாறுங்கள். வெள்ளரி, தயிர் பச்சடியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

இப்போது சுவையான வாழைப்பூ பிரியாணி ( banana flower ) ரெடி!!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

ஆனியன் ஊத்தப்பம் Uthappam Recipe, Recipe Of Onion Uttapam

ஆனியன் ஊத்தப்பம் கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான ஆனியன் ஊத்தப்பம் ( Uthappam  ) செய்து சுவைக்கலாம் வாங்க  Uthappam Recipe, Recipe Of Onion ...