கற்கண்டு வடை
கல்கண்டு பயன்படுத்தி வடை ( Vadai recipe ) சுடலாம் வாங்க :
![]() |
Vadai recipe, Uzhunnu vada |
தேவையான பொருட்கள் :
உளுத்தம் பருப்பு = 200கிராம்
பச்சரிசி = 1 ஸ்பூன்
கல்கண்டு = 200கிராம்
எண்ணெய் = தேவையான அளவு
செய்முறை : 1
உளுந்து மற்றும் அரிசி இரண்டையும் களைந்து ஒன்றரை கப் அளவு தண்ணீர் சேர்த்து பிரிட்ஜில் 30 நிமிடங்கள் வைக்கவும். கல்கண்டை பொடித்துக் கொள்ளவும். 30 நிமிடம் ஆனதும் பருப்புடன் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவை ப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்து கெட்டியாக்கவும்.
செய்முறை : 2
பிறகு அதை எடுத்து பவுடராக வைத்துள்ள கல்கண்டை சேர்த்து பிரிட்ஜில் மீண்டும் 30 நிமிடங்கள் வைக்கவும். இந்த மாவை சிறிய சிறிய வடைகளாக தட்டி காயும் எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
இப்போது சுவையான கற்கண்டு வடை ( Vadai recipe ) ரெடி!!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...