Menu

2022-07-29

பட்டர் கேக் How to make a cake at home, Recipe for butterscotch cake

 பட்டர் கேக்

கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே சுவையான கேக் ( How to make a cake at home  ) ஈஸியாக செய்து அசத்தலாம் வாங்க : 

பட்டர் கேக் How to make a cake at home, Recipe for butterscotch cake
  How to make a cake at home, Recipe for butterscotch cake

தேவையான பொருட்கள் :

மைதா     = 1/4 கிலோ
சர்க்கரை,= 1/4 கிலோ
வெண்ணை = 1/4 கிலோ
முட்டை           =  5 பீஸ்
பேக்கிங் பவுடர் = 1/2 ஸ்பூன் வெனிலா  எசன்ஸ் = 1/2 ஸ்பூன்
டூட்டி ப்ரூட்டி,முந்திரி
திராட்சை சேர்த்து  = 200 கிராம்

செய்முறை : 1

முதலில் மைதா மாவில் பேக்கிங் பவுடரை சேர்த்து3 முறை சலிக்கவும். உருகாத வெண்ணையை பாத்திரத்தில் வைத்து மத்தால் கடையவும். குழைந்தவுடன் சர்க்கரையை மிக்சியில் பொடித்து வெண்ணையில் கொட்டி மத்தால் கடையவும். இரண்டும் ஒன்றாகி கலந்ததும் 5 முட்டைகளையும் மிக்சியில் அடித்து வெண்ணையில் சேர்த்து கடையவும். பின் மைதாமாவைக் கொட்டி மீண்டும் கடையவும். தயிர் திரிந்தது போன்று வரும் இப்போது எசன்ஸ் சேர்த்து கடைந்து பின் டூட்டி, ப்ரூட்டி, முந்திரி, திராட்சை கலந்து வைக்கவும்.

செய்முறை : 2

குக்கர் தட்டில் வெண்ணை தடவி முக்கால் பகுதி அளவிற்கு இதை ஊற்றவும். கேக் செய்யும் குக்கர் அல்லது சாதாரண குக்கரை அடுப்பில் வைத்து அரை இஞ்ச் அளவிற்கு மணலைக் கொட்டி 5 நிமிடம் சூடாக்கவும். பின் குக்கர் தட்டை அதில் வைத்து கேஸ்கெட் போட்டு மூடியை மூடவும். வெயிட் போடக்கூடாது. அடுப்பை சிம்மில் வைக்கவும்.

செய்முறை : 3

பிறகு 15 லிருந்து 20 நிமிடங்கள் கழித்து கேக் வெந்து வாசனை வரும். மூடியைத் திறந்து கம்பி அல்லது குச்சியை சொருகி எடுத்துப் பார்த்தால் ஒட்டாமல் வரும். அடுப்பை அணைத்துவிட்டு 5 நிமிடம் கழித்து குக்கரை திறந்து குக்கர் தட்டை வெளியே எடுத்து ஆறவிடவும்.பின் கத்தி அல்லது ஸ்பூன் கொண்டு கேக்கின் ஓரமாக கீறி எடுத்து, குக்கர் தட்டை தலைகீழாக கவிழ்த்து தட்டினால் கேக் முழுவதுமாக அப்படியே விழும். கேக்கை செர்ரி , க்ரீம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

இப்போது டேஸ்ட் ஆன கேக் ( How to make a cake at home ) வீட்டிலேயே ரெடி!!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly