Menu

2022-04-14

தக்காளி குழம்பு Tomatoes recipes, Tomato curry recipes

 தக்காளி குழம்பு ( Tomatoes recipes )

தக்காளி குழம்பு Tomatoes recipes, Tomato curry recipes
 Tomatoes recipes, Tomato curry recipes


தேவையான பொருட்கள் :

பழுத்த தக்காளி    = 4 பீஸ்
பூண்டு                      =  10 பல்
புளி                            = சிறிய உருண்டை
மிளகாய்தூள்        =  1 1/2 ஸ்பூன் 
பச்சைமிளகாய்     = 2
உப்பு                          = தேவையான அளவு
சின்ன வெங்காயம்    = 1/2 கப்பு 
தாளிக்க :
கடுகு                 = 1/2 ஸ்பூன் 
வெந்தயம்        = 1/4 ஸ்பூன்
சீரகம்                 = 1/2 ஸ்பூன் 
எண்ணெய்      = 4 ஸ்பூன் 
கறிவேப்பிலை = சிறிதளவு 

செய்முறை :

 முதலில் புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி புளிக்கரைசல் தயார் செய்யவும். தக்காளி, மிளகாய்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். பூண்டு, வெங்காயம் தோலுரித்து ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து கீறிய பச்சை மிளகாயைச் சேர்த்து நன்கு வதக்குங்கள். பின்னர் புளிக்கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

இப்போது சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையான தக்காளி ( Tomatoes recipes )குழம்பு தயார் !!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly