இஞ்சி முரப்பா
உடலுக்கு ஆரோக்யம் தரும் இஞ்யை பயப்படுத்தி, வீட்டிலேயே அருமையான இஞ்சி முரப்பா ( Ginger candy ) செய்து பார்க்கலாம் வாங்க :
Ginger candy, How to make candied ginger
தேவையான பொருட்கள் :
பிஞ்சு இஞ்சி அல்லது
சுக்குப் பொடி = 100 கிராம்
சர்க்கரை = 1 கப்
நெய் = 1 ஸ்பூன்
செய்முறை :
முதலில் இஞ்சியைத் தோல் சீவிக் கெட்டியாக அரைத்து வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சர்க்கரையைச் சேர்த்து கம்பி பாகு பதம் வரும் வரை காய்ச்சவும் அரைத்த விழுதை அதில் சேர்க்கவும். இந்தக் கலவை நன்றாக நுரைத்து வந்ததும் 1/2 ஸ்பூன் நெய் விட்டுக் கிளறி இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டுங்கள். ஆறியதும் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
வாந்தி, வாய்க்கசப்பு, வயிற்று மந்தம் ஆகியவற்றுக்கு ஏற்ற இஞ்சி முரப்பா ( Ginger candy ) வீட்டிலேயே ரெடி!!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...