Menu

2022-03-15

வெந்தயக்கீரை புலவ் Vendhaya keerai recipes, vendhaya keerai rice, fenugreek powderfenugreek plant

  வெந்தயக்கீரை புலவ்

 வெந்தயக் கீரையை பயன்படுத்தி சுவையான புலவ் ( vendhaya keerai rice ) செய்து சுவைக்கலாம் வாங்க : 

வெந்தயக்கீரை புலவ் Vendhaya keerai recipes, vendhaya keerai rice, fenugreek powderfenugreek plant
 Vendhaya keerai recipes, vendhaya keerai rice, fenugreek powderfenugreek plant

தேவையான பொருட்கள் : 

பாசுமதி அரிசி       = ஒரு கப்
வெந்தயக்கீரை பொடி = 2 ஸ்பூன்
குடைமிளகாய்     = 1 பெரிய பீஸ் 
 கேரட்                       = 2 பீஸ் 
முட்டை கோஸ்     = 1 கப் ( துருவியது ) 
இஞ்சி,பூண்டு விழுது      = 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய்                = 5 பீஸ் 
வெங்காயம்                        = 1 பெரிய பீஸ் 
வெங்காயத் தாள்             = ஒரு கட்டு
நெய்                                       = தேவையான அளவு
உப்பு                                      = தேவையான அளவு
பிரிஞ்சி இலை                  = 1 பீஸ்
பட்டை, கிராம்பு               = சிறிதளவு

செய்முறை : 1

முதலில் ஐந்து கட்டு வெந்தயக் கீரையை தண்ணீரில் அலசி, நிழலில் உலர்த்துங்கள். நன்றாக உலர்ந்ததும் மிக்ஸியில் அறைத்து பொடித்துவைத்துக் கொள்ளுங்கள். பாசுமதி அரிசியை உப்பு சேர்த்து முக்கால் பதத்துக்கு வடித்து ஆறவையுங்கள்.

செய்முறை : 2

      வாணலியில்   நெய்   விட்டு   பிரிஞ்சி   இலை,   பட்டை ,  கிராம்பு தாளித்து வெங்காயம்  சேர்த்து சிவக்க வதக்கவும் . இஞ்சி,  பூண்டு விழுது   சேர்த்து   பச்சை  வாசனை  போனதும்  அதனுடன்   நறுக்கி வைத்துள்ள  குடை   மிளகாய்,    கேரட்,    துருவிய    கோஸ்,     பச்சை மிளகாய்,  வெங்காயத்    தாள்,    சிறிதளவு    உப்பு    ஆகியவற்றைச் சேர்த்து    குறைந்த    தீயில்     காய்கள்     வேகும்வரை     வதக்கவும். காய்கறிகள் வெந்ததும் வெந்தயக்கீரைப் பொடி, ஆறவைத்துள்ள சாதம்   இரண்டையும்   கொட்டிக்   கிளறி   இறக்கி   வைத்து   சூடாக பரிமாறவும்.

இப்போது சூடான, டேஸ்ட் ஆன வெந்தயக்கீரை புலவ் vendhaya keerai rice )  ரெடி!!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly