Menu

2022-03-15

தூதுவளை தோசை Thoothuvalai doasi, Solanum trilobatum dosai in tamil

 தூதுவளை தோசை

தூதுவளை எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்தது, பெரும்பாலும் இது சளி மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களை விரைவில் குணப்படுத்தக்கூடியது, இதனை தனியாக சாப்பிட யோசிப்பவர்கள், தூதுவளை தோசை யாக செய்து சாப்பிடலாம், எளிமையாக தூதுவளை தோசை ( Thoothuvalai doasi ) செய்யலாம் வாங்க : 

தூதுவளை தோசை Thoothuvalai doasi, Solanum trilobatum dosai in tamil
 Thoothuvalai doasi, Solanum trilobatum dosai in tamil

தேவையான பொருட்கள் : 

பச்சரிசி                  = 1 கப் 
புழுங்கல் அரிசி  = 1 கப் 
துவரம் பருப்பு     =  1 ஸ்பூன் 
கடலைப் பருப்பு = 1 ஸ்பூன் 
தூதுவளை             = 1 கப் (இலைகள் மட்டும்)  
பச்சை மிளகாய் = 6 அல்லது 
காய்ந்த மிளகாய் = 8 
உப்பு                           = தேவையான அளவு 
எண்ணெய்              = தேவையான அளவு 

செய்முறை : 1

 முதலில் பச்சரிசி புழுங்கல் அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து  ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு இதனுடன் சுத்தம் செய்த கீரை. மிளகாய் சேர்த்து நைஸாக அரைத்து கொஞ்சம் உப்பு சேர்த்து கரைத்து மூன்று மணி நேரம் வைத்திருங்கள். மாவு நன்கு புளித்துவிடும். பிறகு சற்று கனமான தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு. திருப்பிப் போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். 

இப்போது சூடான, சத்தான தூதுவளை தோசை ( Thoothuvalai doasi ) தயார் !!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly