Menu

2022-03-20

தேங்காய்பால் கொழுக்கட்டை Thengaay paal Kolukattai seivathu eppadi

 தேங்காய்பால் கொழுக்கட்டை

அருமையான தேங்காய்ப்பால் கொழுக்கட்டை ( Kolukattai seivathu eppadi )  செய்து ருசிக்கலாம் வாங்க : 

தேங்காய்பால் கொழுக்கட்டை Thengaay paal  Kolukattai seivathu eppadi
 Thengaay paal  Kolukattai seivathu eppadi

தேவையான பொருட்கள் :

கொழுக்கட்டை மாவு   = 2 கப்
பயத்தம் பருப்பு             = 1/2 கப்
கடலைபருப்பு                = 1/2 கப்
வெல்லம்                        =  1 கப்
தேங்காய்பால்              = 1 கப்
பாதாம்                             = 10 பீஸ் ( பொடித்தது )
முந்திரி                             = 10 பீஸ்
நெய்                                  = 1 டீஸ்பூன்

செய்முறை : 1 

முதலில் கொழுக்கட்டை மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீர் ஊற்றி கிளறி பக்குவமாக பிசைந்துகொள்ளவும். இரண்டு பருப்பையும் வெறும் வாணலியில் திடமாக வறுத்து தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் இரண்டு விசில் விட்டு குழையாமல் வேக விடவும்.

செய்முறை : 2 

 இந்த மாவை சீடை அளவிற்கு சிறு சிறு உருண்டையாக உருட்டி இட்லி பானையில் வேகவைத்து எடுக்கவும்.வெல்லம் சேர்த்து கரைத்து வடிக்கட்டி, வேக வைத்த பருப்பில் ஊற்றி கலந்து, சிறுதீயில் கொதிக்க விடவும்.

செய்முறை : 3 

பிறகு வேக வைத்த உருண்டைகளை போட்டு கலந்து விடவும்.பருப்பு, வெல்லக்கரைசல், உருண்டைகள் மூன்றும் கலந்து சிறிது கெட்டியான பதம் வரும் போது இறக்கிவைத்து தேங்காய்பால், நெய், பொடித்த பாதாம், முந்திரி துாள் சேர்த்து கிளறவும்.

இப்போது சூடான தேங்காய்ப்பால் கொழுக்கட்டை ( Kolukattai seivathu eppadi ) ரெடி!!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly