ஆம்லெட் ரைஸ்
அனைவருக்கும் பிடித்த ஆம்லேட் ரைஸ் ( Recipe of egg fried rice ) ஹோட்டல் ஸ்டைல் ல் வீட்டிலேயே செய்து அனைவரையும் அசத்தலாம் வாங்க :
தேவையான பொருட்கள் :
பிரியாணி அரிசி = 1/4 கிலோ
வெங்காயம் = 50 கிராம்
கொத்தமல்லி = 1 ஸ்பூன்
கறிவேப்பிலை = சிறிய கொத்து
குடமிளகாய் = 2 பீஸ்
முட்டை கோஸ் = 100 கிராம் அளவு
முட்டை = 6 பீஸ்
உப்பு = தேவையான அளவு
கேரட் = 50 கிராம் அளவு
வெண்ணெய் (அ) நெய் = 1ஸ்பூன்
வெங்காயம் = 50 கிராம்
கொத்தமல்லி = 1 ஸ்பூன்
கறிவேப்பிலை = சிறிய கொத்து
குடமிளகாய் = 2 பீஸ்
முட்டை கோஸ் = 100 கிராம் அளவு
முட்டை = 6 பீஸ்
உப்பு = தேவையான அளவு
கேரட் = 50 கிராம் அளவு
வெண்ணெய் (அ) நெய் = 1ஸ்பூன்
செய்முறை : 1
முதலில் முட்டையை உடைத்து ஊற்றி மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து வெண்ணெய் (அ) நெய்யை ஊற்றி , காய்ந்ததும் முட்டை கலவையை தோசையாக ஊற்றவும். இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்து விரல் நீள அகலத்தில் நாடாக்களாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை : 2
காரட், முட்டை கோஸ், விதை நீக்கிய குடமிளகாய் ஆகியவற்றை சிறு சிறு தூண்டுகளாக மெல்லியதாக வெட்டி வைக்கவும். வெங்காயம் , கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் (அ) நெய் போட்டு காரட், முட்டை கோஸ், குடமிளகாய் போட்டு புரட்டவும்.
செய்முறை : 3
நறுக்கிய வெங்காயம். கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வேக வைத்த அரிசி சாதத்தை வதக்கியவைகளுடன் சேர்த்து முட்டை ஆம்லெட் துண்டுகளையும் சேர்த்து மெதுவாக கிளறி சில நிமிடங்கள் மூடி வைக்கவும்.சாதம் நன்கு வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.
இப்போது சூடானா சுவையான ஆம்லேட் ரைஸ் ( Recipe of egg fried rice ) வீட்டிலேயே தயார்!!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...