Menu

2022-03-20

பச்சைப்பயறு கொழுக்கட்டை Pachchai payiru Kolukattai recipe in tamil

  பச்சைப்பயறு கொழுக்கட்டை

அதிகப்படியான சத்துக்கள் நிறைந்த பச்சைபயிறு வை வைத்து சுவையான கொழுக்கட்டை ( kozhukatta  ) செய்யலாம் வாங்க :

பச்சைப்பயறு கொழுக்கட்டை Pachchai payiru Kolukattai recipe in tamil
  Pachchai payiru Kolukattai recipe in tamil

தேவையான பொருட்கள் : 

கொழுக்கட்டை மாவு  = 2கப்
பச்சைப்பயறு               = 1 கப்
தேங்காய் துருவல்      = 1 கப்
பச்சைமிளகாய்            = 3 பீஸ்
இஞ்சி                              = சிறிய துண்டு
கறிவேப்பிலை             = சிறிய கொத்து
கொத்துமல்லி               = சிறிய கொத்து
உப்பு                                  =  தேவையான அளவு.

செய்முறை : 1 

முதல்நாள் இரவே பச்சைபயறை சுத்தம் செய்து கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும். பயறு மூழ்கும் அளவு நீர் ஊற்றி ஊறவைத்து, மறுநாள் காலை குக்கரில் 2 விசில் விட்டு வேக வைக்கவும். இப்படி செய்வதால் தண்ணீரை வடிக்கட்ட தேவையில்லை. சத்துக்களும் அப்படியே இருக்கும்.

செய்முறை : 2 

தேங்காய், இஞ்சி, பச்சைமிளகாய், ஆகியவற்றை மிக்சியில் வைத்து அரைத்து, வேகவைத்த பயறுடன் கலந்து, உப்பும் சேர்த்து, வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, கொத்து மல்லி போட்டு தாளித்து, பச்சைப்பயறு கலவையை சேர்த்து சிறு தீயில் கிளறவும்.

செய்முறை : 3

 பின்னர் இறக்கி ஆற வைக்கவும். மாவை கொழுக்கட்டையாக செய்து நடுப்பகுதியில் பச்சை பயிரை பூரணமாக வைத்து இட்லி பானையில் 20 லிருந்து 30 நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.

இப்போது சத்தான பச்சை பயிறு கொழுக்கட்டை ( kozhukatta ) ரெடி!!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly