ரவை கொழுக்கட்டை
ரவையை வைத்து புது ஸ்டைல் ல் கொழுக்கட்டை ( Kolukattai recipe in tamil ) செய்து அசத்தலாம் வாங்க :
kolukattai recipe in tamil, How to make kolukattai
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு = 1/2 கப்
உளுந்து = 1/2 கப்
மிளகாய் = 6 பீஸ்
பெருங்காய தூள் = 1/2 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் = 1/2 கப்
எண்ணெய் = தேவையான அளவு
நெய் = 1 ஸ்பூன்
கடுகு, உளுந்து = 1 ஸ்பூன்
கறிவேப்பிலை = ஒரு கொத்து
மல்லித்தழை = ஒரு கொத்து
உப்பு = தேவையான அளவு
செய்முறை : 1
முதலில் பருப்பு வகைகளை சேர்த்து 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும் .மிளகாய், பெருங்காயதூள் சேர்த்து கொஞ்சம் கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் இரண்டரை கப் அளவு தண்ணீர், உப்பு, தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய மல்லித்தழை, மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் மற்றும் நெய்யை ஒன்றாக ஊற்றி, காயவைத்து கடுகு, உளுத்து தாளித்து, கரைத்து வைத்துள்ள பருப்புக் கலவையை ஊற்றுங்கள்.
செய்முறை : 2
பருப்பு கலவை சற்று தளதளவென்று கெட்டியாக கொதிக்கும்போது, ஒரு கையால் அரிசி ரவையை சேர்த்துக்கொண்டே, இன்னொரு கையால் கட்டியில்லாமல் கிளறவும். கலவையில் தண்ணீர் வற்றியதும் பாத்திரத்தை மூடி வைத்து, மிதமான தீயில், 15 நிமிடம் வரை வேக வைத்து இறக்கவும். சற்று ஆறியதும் சிறிது சிறிதாக மாவை எடுத்து கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லிப் பானையில் வைத்து பத்து நிமிடம் வரை வேக வைக்கவும். மாவு வெந்து கொழுக்கட்டை தயாரானதும் கீழே இறக்கி பரிமாறலாம்.
இப்போது சூடான ரவா கொழுக்கட்டை ( Kolukattai recipe in tamil ) ரெடி !!!
Share this post
Delicious rava kozhukattai...
பதிலளிநீக்குpls keep in touch
ofcourse, Thanks for your support...
பதிலளிநீக்கு