நெல்லிக்காய் மோர் குழம்பு
நெல்லிக்காய் மற்றும் தயிர் கலந்து அருமையான குழம்பு ( amla recipe, gooseberry recipe ) செய்து பார்க்கலாம் :
gooseberry recipe, amla recipe
தேவையான பொருட்கள் :
தயிர் = 1 கப்
மஞ்சள் தூள் = 1 ஸ்பூன்
அரைக்க:
தேங்காய்த் துருவல் = 2 ஸ்பூன்
ஊறவைத்த அரிசி = 1 ஸ்பூன்
இஞ்சி = சிறு துண்டு
சீரகம் = 1/2 ஸ்பூன்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் = 2 ஸ்பூன்
கடுகு = 1/2 ஸ்பூன்
வெந்தயம் = 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை = சிறிதளவு
காய்ந்த மிளகாய்= 2 பீஸ்
செய்முறை :
முதலில் நெல்லிக்காவை வேகவைத்து, கொட்டைகளை நீக்கி எடுத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். தயிரில் உப்பு, மஞ்சள் தூள், நெல்லிக்காய் விழுது மூன்றையும் கலந்து, சிறு தீயில் கொதிக்கவிடுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி வையுங்கள். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றையும் சேர்த்து தாளித்து, மோர்க்குழம்பில் சேர்த்துக் கிளறுங்கள்.
இப்போது சுட சுட நெல்லிக்காய் மோர் குழம்பு ( amla recipe, gooseberry recipe ) ரெடி!!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...