Menu

2022-03-20

கோதுமை கொழுக்கட்டை செய்வது எப்படி Godhumai maavu kozhukattai

 கோதுமை  கொழுக்கட்டை 

                      கோதுமையை பயன்படுத்தி சுவையான கொழுக்கட்டை ( kozhukattai ) செய்து ருசிக்கலாம் வாங்க : 

கோதுமை கொழுக்கட்டை செய்வது எப்படி Godhumai maavu kozhukattai
 Godhumai maavu kozhukattai

தேவையான பொருட்கள் : 

கோதுமை மாவு    = 2 கப்
தேங்காய் துருவல் = 2 கப்
வெல்லம்               = 1 கப்முந்திரி
ஏலக்காய்              = 10 பீஸ் 
திராட்சை               = 50 கிராம் 
நெய்                        = தேவையான அளவு

செய்முறை : 1 

முதலில் கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, உருக்கிய நெய் கலந்து வெதுவெதுப்பான வெந்நீர் ஊற்றி பூரி மாவு போல பிசைந்து கொள்ளவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிக்கட்டி கெட்டியாக பாகு காய்ச்சவும்.

செய்முறை : 2 

வெல்ல பாகில் தேங்காய் துருவல், முந்திரி, ஏலக்காய் , திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து கலந்து கிளறவும். பூரணம் கெட்டியாக இருக்கும் படி வைக்கவும். மாவை சிறு சிறு பூரிகளாக தேய்த்து அதன் நடுவில் இந்த பூரணத்தை வைத்து மூடவும். எல்லா மாவையும் இப்படி கொழுக்கட்டை களாக செய்துகொள்ளவும்.

செய்முறை : 3

இட்லி தட்டில் வாழை இலையை சிறிய தூண்டுகளாக நறுக்கி வைத்து அதில் நெய் தடவி அதன் மேல் இந்தக் கொழுக்கட் டைகளை வைத்து, இலையை மூடி இட்லி பானையில் 30  நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.

இப்போது சூடான சுவையான கோதுமை கொழுக்கட்டை (  kozhukattai ) தயார் !!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly