காலிஃபிளவர் மசாலா பக்கோடா
காலிஃபிளவரை பயன்படுத்தி மசாலா பொருட்களை சேர்த்து ருசியான காலிஃபிளவர் பக்கோடா ( Cauliflower tamil recipe ) செய்து அசத்தலாம் வாங்க :
Cauliflower tamil recipe, Cauliflower chilli
தேவையான பொருள்கள் :
பெரிய காலிஃபிளவர் = 1 பீஸ்
தேங்காய் = 1/2 மூடி
சர்க்கரை = 2 ஸ்பூன்
நெய் = 50 மில்லி
இஞ்சி = சிறிய துண்டு
கடுகு = 2 ஸ்பூன்
காய்ந்த திராட்சை = 50 கிராம்
பச்சை மிளகாய்= 3 பீஸ்
சீரகம் = 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் = 1 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை : 1
காலிஃபிளவரின் இலைகளையெல்லாம் நீக்கிவிட்டுப் பூவை முழுவதுமாக வைத்துக்கொள்ளவும். கடுகு. இஞ்சி, பச்சைமிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். காலிஃபிளவரின் அடித்தண்டை நீக்கிவிட்டுப் பூவை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பூவை உதிர்க்கக்கூடாது.
செய்முறை : 2
வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் விட்டுக் காய்ந்தவுடன் தேங்காய்த்துருவல், சர்க்கரை, காய்ந்த திராட்சை ஆகியவை சேர்த்து, சிறு தீ எரியும் அடுப்பில் வைத்து இறக்கி வைக்கவும்.பிறகு மீண்டும் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்விட்டுச் சீரகம் சேர்த்து பொரித்தவுடன் அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி இறக்கி வைக்கவும்.
செய்முறை : 3
அடுத்து, மூன்று டேபிள் ஸ்பூன் நெய் விட்டுக் காய்ந்த வுடன், மஞ்சள், உப்புத்தூள் ஆகியன சேர்த்து காலிஃபிளவரை கவனமாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பிறகு இறக்கிய காவிஃபிளவரை அகலமான ஓர் தட்டில் வைத்து, கடுகு விழுதைப் பரவலாக அதன்மேல் பரப்பிவிடவும். பின்பு, தேங்காய்த்துருவல் கலவையை ஒரே சீராக அதன்மேல் தூவி சூடாக பரிமாறவும்.
இப்போது சுவையான காலிஃபிளவர் மசாலா பக்கோடா ( Cauliflower tamil recipe ) ரெடி!!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...