Menu

2022-03-15

காலிஃபிளவர் - கடுகுப் பொரியல் Cauliflower fry in tamil, Cauliflower pakoda tamil

காலிஃபிளவர் - கடுகுப் பொரியல்

காலிஃபிளவரை கொண்டு அனைவருக்கும் பிடித்த வகையில் காலிஃபிளவர் கடுகு பொரியல் ( Cauliflower fry in tamil ) செய்யலாம் வாங்க : 

காலிஃபிளவர் - கடுகுப் பொரியல் Cauliflower fry in tamil, Cauliflower pakoda tamil
 Cauliflower fry in tamil, Cauliflower pakoda tamil

தேவையான பொருள்கள் : 

காலிஃபிளவர்           = 1 பெரிய பீஸ் 
உருளைக்கிழங்கு  = 2 பீஸ் 
கடுகு விழுது            = 2 ஸ்பூன் 
சீரகம்                          = 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்             = 1 ஸ்பூன் 
பச்சை மிளகாய்     = 3
உப்பு                             = தேவையான அளவு
எண்ணெய்                = தேவையான அளவு 

செய்முறை : 1

 முதலில் தண்டுகளையெல்லாம் நீக்கிய ஃபிளவர் பூவை மட்டும் கொத்துக் கொத்தாக நறுக்கிக் கொள்ளவும். தோலை நீக்கிய உருளைக்கிழங்கைச் சிறு துண்டுகளாக தறுக்கி வைக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் சீரகத்தை சேர்த்து நன்கு பொரிந்தவுடன் காலிஃபிளர், உருளைக்கிழங்கு ஆகிய இரண்டையும் சேர்த்து, நன்றாக வதக்கவும்.

செய்முறை : 2

பிறகு உப்பு, மஞ்சள் தூள், கடுகு விழுது, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் ஆகியவை சேர்த்து, மேலும் சிறிது நேரம் வதக்கவும். பின்பு வாணலியை மூடி, சிறு தீயில் வைக்கவும்.பத்து நிமிடங்கள் கழித்துத் தீயை அதிகரித்து, நன்கு வதக்கி, காய்கறிகள் வெந்த பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

இப்போது சுடச்சுட காலிஃபிளவர் கடுகு பொரியல்  ( Cauliflower fry in tamil ) தயார்!!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly