வாழைத்தாண்டு சாதம்
வாழைத்தண்டு எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது, அனைவரும் சாப்பிடும் வகையில் சுவையான வாழைத்தாண்டு சாதம் ( vazhaithandu rice ) செய்து அசத்தலாம் வாங்க :
Banana stem recipes, vazhaithandu rice pulav
தேவையான பொருட்கள் :
அரிசி = ஒரு கப்
தேங்காய் = ஒரு மூடி (துருவியது)
தேங்காய்ப் பால் = ஒரு கப் பனங்கற்கண்டு = 2 ஸ்பூன் (பொடித்தது)
மோர், உப்பு = தேவையான அளவு
தாளிக்க:
காய்ந்த மிளகாய் = 7 பீஸ்
கடுகு, உளுந்து = 1/2 ஸ்பூன்
பெருங்காயம் = 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை = சிறிய கொத்து
நல்லெண்ணெய் = தேவையான அளவு
செய்முறை : 1
முதலில் வாழைத்தண்டைப் பொடியாக நறுக்கி மோரில் ஊறவைக்கவும். அரிசியைக் கழுவி, அதனுடன் நறுக்கிய வாழைத்தண்டு, ஒரு கப் தண்ணீர், ஒரு கப் தேங்காய்ப் பால், பொடித்த பனங்கற்கண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். குக்கர் சூடு குறைந்ததும் சாதத்தை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற வைக்கவும்.
செய்முறை : 2
வாணலியை அடுப்பில் வைத்து துருவிய தேங்காயைப் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள். மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பிறகு ஆறவைத்துள்ள சாதம், தேங்காய்த் துருவல் இரண்டையும் அதில் கொட்டிக் கிளறி, இறக்கவும்.
இப்போது சுவையான வாழைத்தாண்டு சாதம் ( vazhaithandu rice ) தயார்!!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...