உருளைக்கிழங்கு ஊறுகாய்
ஊறுகாய் என்றாலே மாங்காய், எலுமிச்சை, பூண்டு ஊறுகாய் தான் நினைவுக்கு வரும், இதற்க்கு மாற்றாக உருளைக்கிழங்கு ( Potato recipes ) வைத்து ஊறுகாய் செய்து அசத்தலாம் வாங்க :
Potato recipes, Indian potato recipes
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு = 1/2 கிலோ
எலுமிச்சம் பழம் = 2 பீஸ்
மிளகாய்த்தூள் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
கடுகு பொடி = 1 ஸ்பூன்
வெந்தயத்தூள் = 1 ஸ்பூன்
வெள்ளைப்பூண்டு = 2 பள்ளு
கரம் மசாலா = 1/2 ஸ்பூன்
கடுகு = 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் = 1/2 ஸ்பூன்
பெருங்காயம் = 1/2 ஸ்பூன்
நல்லெண்ணெய் = தேவையான அளவு
செய்முறை :
முதலில் உருளைக்கிழங்கை நன்றாகக் கழுவி ஈரம் போகத் துடைத்து விட்டு தோலுடனையே சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் வைக்கவும்.தேவையான அளவு எண்ணெயைக் கொதிக்க வைக்கவும். இந்த எண்ணெயில் கிழங்குத் துண்டுகளை 15 நிமிடங்கள் போட்டு வைத்திருக்கவும். உப்பு, கருப்பட்டி, மிளகாய்ப்பொடி, வெந்தயப் பொடி இவற்றைக் கலந்து உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். மூன்றாவது நாள் எலுமிச்சம் சாற்றை ஊற்றவும். சிறிது எண்ணெயில் மற்ற சாமான்களைத் தாளித்துக் கொட்டவும். மீதி உள்ள எண்ணெயை உருளைக்கிழங்கு மூழ்கும் வரை ஊற்றவும். 1 வாரம் வெயிலில் வைத்திருக்கவும், 1 மாதம் கழித்து உபயோகிக்கவும்.
இப்போது உருளைக்கிழங்கு ஊறுகாய் ( Potato recipes ) தயார் !!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...