Menu

amazon.in

2022-02-23

பாசிப்பருப்பு புட்டு Pasi paruppu puttu in tamil, How to make pasi paruppu recipe

     பாசிப்பருப்பு புட்டு

அதிக சத்துக்கள் நிறைந்தபாசிபருப்பை பயன்படுத்தி சுலபமாக புட்டு ( Pasi paruppu puttu ) செய்து அசத்தலாம் வாங்க :


பாசிப்பருப்பு புட்டு Pasi paruppu puttu in tamil, How to make pasi paruppu recipe
 Pasi paruppu puttu in tamil, How to make pasi paruppu recipe

 
தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு  = 2 கப்
வெல்லம்         = 1/2 
சர்க்கரை         = 1/4 
தேங்காய்         = 1/2 மூடி 
ஏலக்காய்த்தூள் = 1 ஸ்பூன் 

செய்முறை : 1 

முதலில் பாசிப்பருப்பை நன்றாக சுத்தம் செய்து, ஒரு பாத்திரத்தில் வைத்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து  ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.அரைத்து வைத்த பாசி பருப்பை இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைக்கவும். பிறகு கீழே இறக்கி சூடாக இருக்கும் பொழுதே நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.

செய்முறை : 2 

ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு, தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். நன்றாகக் கரைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.வேக வைத்து உதிர்த்த மாவில் வெல்லப்பாகை ஊற்றி நன்றாகக் கிளறிக் கொள்ள வேண்டும். தேங்காய்த் துருவல் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி பரிமாறலாம். அல்லது புட்டு உழக்கு இருக்குமெனில் மாவு ,வெல்லம், ஏலக்காய், தேங்காய் துருவல்  என அனைத்து பொருட்களையும் பிசைந்து உழக்கில் வைத்து வேகவைத்து பரிமாறலாம். 

இப்போது சுட சுடபாசி பருப்பு புட்டு ( Pasi paruppu puttu ) ரெடி !!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

மாம்பழ கேசரி Kesari Sweet, Mango Kesari In Tamil,How To Make Kesari Recipe

மாம்பழ கேசரி முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், இதில் சுவை மட்டுமல்லாமல், எண்ணற்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லோரும் விரும்பி சாப்பிடும் மாம்ப...