Menu

amazon.in

2022-02-23

மட்டன் சூப் Mutton soup, How to make mutton soup

  மட்டன் சூப்

ஆட்டுக்கறியை பயன்படுத்தி ஈசியாக ஆட்டு கால் சூப்க்கு இணையாக சூப் ( Mutton soup ) செய்து அசத்தலாம் வாங்க : 


மட்டன் சூப் Mutton soup, How to make mutton soup
 Mutton soup, How to make mutton soup

தேவையான பொருட்கள் :

 ஆட்டு எலும்பு      = 250 கிராம்
மிளகுத்தூள்          = 1 ஸ்பூன் 
சீரகத்தூள்             =  1 ஸ்பூன் 
இஞ்சி விழுது        = 1 ஸ்பூன்
பூண்டுப்பல்          = 4 பீஸ் 
சிவப்பு மிளகாய்  =  2 பீஸ் 
எலுமிச்சம்பழம்   = 1 பீஸ் 
மஞ்சள்தூள்           =  1 ஸ்பூன்
உப்பு                         =  தேவையான அளவு
 கறிவேப்பிலை    =  சிறிய கொத்து
 கொத்தமல்லி      = சிறிய கொத்து 
நல்லெண்ணெய் =  தேவையான அளவு
சின்ன வெங்காயம் = 6 பீஸ் 

செய்முறை : 1

அதிக கறி இல்லாத எலும்புத் துண்டாக கேட்டு வாங்கி, நன்றாக கழுவி குக்கர் பாத்திரத்தில் வைக்கவும். எலும்பு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றவும். மஞ்சள் தூள், இஞ்சி விழுது, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கி வேக வைக்கவும், மூன்று விசில் வந்ததும் 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.

செய்முறை : 2

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காந்ததும் சிவப்பு மிளகாய் வற்றல், மிளகுத்தூள், சீரகத்தூள், பூண்டுப்பல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். எலும்புத்துண்டு வெந்த சாற்றை வடித்து எடுத்து தாளித்ததில் ஊற்றி கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு மூடி ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து எலுமிச்ச்சை சாற்றை ஊற்றி கலக்கி பரிமாறலாம்.

இப்போது சூடானா சுவையான மட்டன் ரசம் தயார்!!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

மாம்பழ கேசரி Kesari Sweet, Mango Kesari In Tamil,How To Make Kesari Recipe

மாம்பழ கேசரி முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், இதில் சுவை மட்டுமல்லாமல், எண்ணற்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லோரும் விரும்பி சாப்பிடும் மாம்ப...