Menu

2022-02-11

கொழுக்கட்டை மசால் சுண்டல் Kolukattai masala sundal, kolukattai recipe

 கொழுக்கட்டை மசால் சுண்டல்

கொழுக்கட்டையை சுண்டல் போல செய்து, மசாலா சேர்த்து கொழுக்கட்டை சுண்டல் ( kolukattai recipe ) செய்யலாம் வாங்க : 


கொழுக்கட்டை மசால் சுண்டல் Kolukattai masala sundal, kolukattai recipe
 Kolukattai masala sundal, kolukattai recipe

தேவையான பொருட்கள் :


 அரிசி மாவு            =        1 கப் அளவு  
தண்ணீர்                 = தேவையான அளவு 
 உப்பு                        = தேவையான அளவு
 நல்லெண்ணெய் =  தேவையான அளவு 
கடுகு,உளுந்து       =  2 ஸ்பூன்
 காய்ந்த மிளகாய் = 3 பீஸ் 
பெருங்காயத்தூள் = 1 ஸ்பூன்  
கறிவேப்பிலை        = சிறிய கொத்து 
 தேங்காய் எண்ணெய் = 1 ஸ்பூன்


செய்முறை : 1 

 முதலில் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். இதனுடன்  ஒரு ஸ்பூன்  உப்பு மற்றும்  நல்லெண்ணெய் சேர்த்துக் கலக்கவும்.  தண்ணீர் நன்றாக கொதித்ததும் , அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து. கட்டியில்லாமல் நன்கு கலக்கவும். மாவு நன்றாக வெந்ததும்  மூடி வைத்து ஆற வைக்கவும். சிறிது நேரம் கழித்து மாவு ஆறிய பின்பு, சிறிய அளவு உருண்டைகளாக பிடித்துவைக்கவும். 

செய்முறை : 2 

 இந்த உருண்டைகளை இட்லி வேக வைப்பது போல நீராவியில் வேக  வைத்து எடுக்கவும்.  கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, எண்ணெய்  சூடானதும், கடுகு, உளுந்து சேர்த்து தாளிக்கவும்.  பிறகு அதில் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும். இறுதியில்  வேகவைத்த மாவு  உருண்டைகளைப் சேர்த்து , நன்றாக கிளறி இறக்கி பரிமாறலாம். 

இப்போது சூடான, சுவையான கொழுக்கட்டை மசால்  சுண்டல் ( kolukattai recipe  ரெடி !!!



Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly