Menu

2022-02-11

மசாலா ஸ்வீட் கார்ன் Indian sweet corn recipe, How to make sweet corn recipes

 மசாலா ஸ்வீட் கார்ன்

ஸ்வீட் கார்ன் யை பயன்படுத்தி குழந்தைகளுக்கு பிடித்த வகையில் மசாலா ஸ்வீட் கார்ன் ( Indian sweet corn recipe ) செய்து அசத்தலாம் வாங்க : 


மசாலா ஸ்வீட் கார்ன் Indian sweet corn recipe, How to make sweet corn recipes
 Indian sweet corn recipe, How to make sweet corn recipes

தேவையான பொருட்கள் : 

ஸ்வீட் கார்ன்               = 2 முழுவதும் 
கேரட்                               = 1 பீஸ் 
கடுகு, உளுந்து           = 1 ஸ்பூன் 
தேங்காய்                      = 1/2 மூடி 
எலுமிச்சை சாறு       = 1 ஸ்பூன் 
எண்ணெய்                   = தேவையான அளவு 
உப்பு                                 = தேவையான அளவு 
கருவேப்பிலை           = 1 சிறிய கொத்து 
பச்சைமிளகாய்         = 3 பீஸ் 
பெருங்காயதூள்       = 1/2 ஸ்பூன் 

செய்முறை : 1

                    முதலில் ஸ்வீட்கார்ன் முத்துக்களை உதிரியாக பிரித்து வைக்கவும். தேங்காய் மற்றும் கேரட் யை துருவி வைக்கவும். கருவேப்பிலை மற்றும் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். ஸ்வீட்கார்ன் முத்துக்களை குக்கரில் வைத்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 2 லிருந்து 3 விசில் வரும்வரை வேக வைக்கவும். 

செய்முறை : 2 

                        வேகவைத்த ஸ்வீட்கார்ன் முத்துக்களை தனியாக எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்து தாளிக்கவும். பிறகு இதனுடன் பெருங்காயதூளும் பச்சைமிளகாய் மற்றும்  கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

செய்முறை : 3 

                                 இவை வதங்கியதும், துருவிய கேரட் சேர்த்து கிளறவும். இறுதியில் வேகவைத்த ஸ்வீட்கார்ன் முத்துக்களை சேர்த்து நன்கு கிளறவும். இறக்கும் வேளையில் தேங்காய் துருவல் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து இறக்கி பரிமாறலாம். 

                                 இப்போது சுவையான மசாலா ஸ்வீட்கார்ன் Indian sweet corn recipe ) தயார் !!!



Share this post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly