புளியின் பலன்கள் ( Tamarind benefits )
1.அறுசுவைகளில் ஒன்றானதும், சமையல் பொருட்களில் இன்றியமையாதது மான புளி எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. புளியின் சிறப்புகளை கீழே காண்போம் :
Tamarind benefits, Tamarind uses
2.புளியம் பூவை அரைத்து கண்ணைச் சுற்றி பற்றுப்போட்டால் கண் வலி,கண் சிவப்பது போன்றவை சரியாகும். புளியம்பட்டி.
3.புளியம்பட்டை, தூள் உப்பு ஆகியவற்றை வருத்து பொடி செய்து, சீரகத் தண்ணீருடன் சேர்த்து காலை மாலை குடித்து வந்தால், வயிற்றுப்புண் செரிமான பிரச்சனை, வயிற்று வலி ஆகியவை சரியாகும்.
4.பெண்கள் புளியம்பழம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை அரைத்து உருண்டையாக்கி கொதிநீரில் கலந்து காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் கருப்பை இறக்கம் சரியாகும்.
5.புளியங்கொட்டை, உப்பு, கருவேலம்பட்டை ஆகியவற்றைப் பொடிசெய்து, தினமும் பல் தேய்த்து வந்தால் பல் கூச்சம், பல் வலி,ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும்.
6.புலியுடன் உப்பு சேர்த்து உள்நாக்கில் தடவிவந்தால், உள்நாக்கில் சதை வளர்வது குறையும்.
7.புளிய இலையை கொதிக்க வைத்து காய்ச்சி, அதனுடன் பால் சேர்த்து குடித்து வந்தால் சீத பேதி ரத்தபேதி ஆகியவை சரியாகும்.
8.இதன் இளம் இலைகளை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்று மந்தம் ஆவது சரியாகும்.
9.புளி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
10.புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.
11.புளியங்கொட்டை தோல் மாதுளம் பழத்தோல் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து சூரணம் செய்து சிறிய உருண்டையாக செய்து, வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாந்தி, வாயு பொறுமல் சரியாகும்.
12.புளியமரத்தின் இலைகள் கழுத்து, கை கால் சுளுக்கு, வீக்கம் ஆகியவற்றை சரி செய்ய உதவுகிறது புளியம்பூ உடலுக்கு குளிர்ச்சி தரும்.
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...