Menu

2022-01-01

முருங்கைக்கீரை சூப் Drumstick leaves soup recipe , (Moringa leaves soup )

 முருங்கைக்கீரை சூப்

முருங்கைக்கீரையில் வைட்டமின் A ,வைட்டமின் C , சுண்ணாம்பு, மாங்கனீசு ஆகிய சத்துக்கள் இருக்கிறது. நாம் உடலுக்கு ஏராளமான பலன்களை தரும் முருங்கைக்கீரையை ( Drumstick leaves soup recipe ) வைத்து சூப் செய்யலாம் வாங்க : 

Drumstick leaves soup recipe , (Moringa leaves soup )
Drumstick leaves soup recipe , (Moringa leaves soup )

தேவையான பொருட்கள் : 
முருங்கைக்கீரை  = 1 கட்டு 
கருவேப்பிலை       = 1 சின்ன கட்டு 
சோம்பு                       = 1/2 ஸ்பூன் 
நெய்                             = 1 ஸ்பூன் 
தேங்காய்ப் பால்   = ஒரு கப்பு 
சோள மாவு              = 1 ஸ்பூன் 
மிளகு                          = 1/2 ஸ்பூன் 
உப்பு                            = தேவையான அளவு 
பச்சைமிளகாய்    = 2பீஸ் 
பட்டை                         = 1 பீஸ் 
பால்                             = 1 கப்பு 
பெரியவெங்காயம் = 2 பீஸ் 

செய்முறை : 1 

                    முதலில் முருங்கைக்கீரை இலையை தனியாக கிள்ளி, தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கிவைக்கவும். இதேபோல வெங்காயம்,தக்காளி, பச்சைமிகாயையும் பொடியாக நறுக்கி வைக்கவும். 

செய்முறை : 2 

                          பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றவும், நெய் சூடேறியதும், சோம்பு, பட்டை சேர்க்கவும். வெடித்ததும், வெங்காயம்,பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு  சோள மாவு சேர்த்து 2 லிட்டர் வரையில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். 

செய்முறை : 3 

                            நன்கு கொதித்ததும், கீரையை சேர்த்து, கீரை நன்கு வெந்து குழையும் வரை காத்திருக்கவும். கீரை குழைந்ததும், பால், தேங்காய்ப்பால், ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் பொடியாக்கிய மிளகு சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும். இறுதியில் இறக்கி, கருவேப்பிலை கிள்ளிபோட்டு சூடாக பருகலாம். 

                                 இப்போது சுட சுட Drumstick leaves soup recipe ) முருங்கைக்கீரை சூப் ரெடி !!!



Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly