சிக்கன் நூடுல்ஸ்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சிக்கன் நூடுல்ஸ் ( Chicken noodle recipes ) ரூசியாகவும், எளிமையாகவும் செய்யலாம் வாங்க :
 |
Chicken noodle recipes, Maggi chicken |
தேவையான பொருட்கள் :
சிக்கன் = 200 கிராம்
தனி நூடுல்ஸ்
அல்லது மேகி = 1 பெரிய பாக்கெட்
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
பெரிய வெங்காயம் = 100 கிராம்
பச்சைமிளகாய் = 3 பீஸ்
சோயா சாஸ் = 1 ஸ்பூன்
தக்காளி சாஸ் = 1 ஸ்பூன்
சர்க்கரை = 1/4 ஸ்பூன்
மிளகு தூள் = 1 ஸ்பூன்
செய்முறை : 1
முதலில் எலும்பு இல்லாத சிக்கனை சுத்தம் செய்து கழுவி, சிக்கனில் 65 பவுடர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து எண்ணெயில் பொரித்து எடுத்துவைக்கவும். பொரித்த சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
செய்முறை : 2
ஒரு கடாயில் நூடுல்ஸ் வைத்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும், நூடுல்ஸ் வெந்ததும் தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
செய்முறை : 3
இவை வதங்கியதும், வேகவைத்த நூடுல்ஸ் ஐ சேர்க்கவும், பிறகு நறுக்கி வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும், இதனுடன் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகு தூள், தேவையான அளவு உப்பு மற்றும் 1/4 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். அனைத்து பொருட்களும் நூடுல்ஸ் வுடன் கலந்ததும் இறக்கி பரிமாறவும்.
இப்போது ஹோட்டல் ஸ்டைல் ல் சிக்கன் நூடுல்ஸ் ( Chicken noodle recipes ) ரெடி !!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...