புளி மாங்காய் ஊறுகாய்
புளியுடன் மாங்காய் சேர்த்து அருமையான புளி மாங்காய் ஊறுகாய் ( Tamarind pickle ) செய்யலாம் வாங்க :
Tamamrind with mango pickle recipe
தேவையான பொருட்கள் :
மாங்காய் = 100 கிராம்
தண்ணீர் = 1/2 லிட்டர்
இஞ்சி = 100 கிராம்
பச்சைமிளகாய் = 50 கிராம்
எண்ணெய் = தேவையான அளவு
கடுகு = 1 ஸ்பூன்
வெந்தயம் = சிறிதளவு
உப்பு = தேவையான அளவு
மஞ்சள்தூள் = 1 ஸ்பூன்
செய்முறை : 1
புளி, இஞ்சி, பச்சை மிளகாய், மாங்காய் ஆகியவற்றை தேவைக்கு ஏற்ப்ப சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். மாங்காவை ஈரம் போகும்வரை நன்கு காயவைக்கவும்.
செய்முறை : 2
1/2 லிட்டர் தண்ணீருடன், புளியை கரைத்து, புளிக்கரைசலை நன்கு வடிகட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளித்து, இதனுடன் புளிக்கரைசலை சேர்த்து கிளறி கொதிக்க விடவும்.
செய்முறை : 3
பிறகு இஞ்சி, பச்சைமிளகாய், மாங்காய் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, மஞ்சள் தூள் சேர்த்து, இறுதியில் கொஞ்சம் வெல்லம் போட்டு, நன்கு கெட்டியானதும் இறக்கவும்.
இப்போது சுட சுட புளி மாங்காய் ஊறுகாய் ( Tamarind pickle ) ரெடி !!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...