தயிர் சாதம் ( Curd rice )
எல்லோருக்கும், எப்போதும் பிடித்த தயிர்சாதம்,ஈசியாக செய்யலாம் வாங்க :
தேவையான பொருட்கள் :
அரிசி = 1 கிலோ
தயிர் = 1 கப்பு
பச்சைமிளகாய் = 5 பீஸ்
கடுகு = 1 ஸ்பூன்
மாங்காய் = 1/4 கிலோ
உளுத்தம்பருப்பு = 50 கிராம்
கேரட் = 1 பீஸ்
வெண்ணெய் = 50 கிராம்
எண்ணெய் = 100 மில்லி
பால் = 1/2 லிட்டர்
கருவேப்பிலை = சின்ன கொத்து
உப்பு = தேவையான அளவு
தயிர் = 1 கப்பு
பச்சைமிளகாய் = 5 பீஸ்
கடுகு = 1 ஸ்பூன்
மாங்காய் = 1/4 கிலோ
உளுத்தம்பருப்பு = 50 கிராம்
கேரட் = 1 பீஸ்
வெண்ணெய் = 50 கிராம்
எண்ணெய் = 100 மில்லி
பால் = 1/2 லிட்டர்
கருவேப்பிலை = சின்ன கொத்து
உப்பு = தேவையான அளவு
மாதுளை = 1 பீஸ்
செய்முறை : 1
முதலில் அரிசியை, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பக்குவமாக, சாதமாக கொஞ்சம் குழையவிட்டு வேகவைத்து கொள்ளவும்.கேரட், மாங்காய், பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். மாதுளை பழத்தை நறுக்கி தனியாக பிரித்து எடுத்து வைக்கவும்.
செய்முறை : 2
வேகவைத்த சாதத்தை எடுத்து, அதனுடன் தயிரை ஊற்றி நன்கு கடையவும். அதனுடன் பால் மற்றும் வெண்ணெய் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு மேலும் கடையவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றை சாதத்துடன் சேர்த்து கிளறவும்.
செய்முறை : 3
இறுதியில் நறுக்கி வைத்துள்ள பச்சைமிளகாய், மாங்காய், கேரட் மற்றும் மாதுளம்பழத்தை சேர்த்து லேசாக கிளறவும்.
இப்போது ருசியான தயிர்சாதம் ( Curd rice ) தயார் !!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...