இனிப்பு சீடை ( Seedai recipe )
சீடை என்றாலே காரமாக தான் அதிகம் சாப்பிட்டிருப்போம், இப்போது இனிப்பு சீடை செய்து ரூஷிக்கலாம் வாங்க :
Seedai recipe,Recipe of sweet seedai
தேவையான பொருட்கள் :
தேங்காய் = 1 மூடி
எண்ணெய் = தேவையான அளவு
வெல்லம் = 2 கப்பு பொடியாக
பொட்டுக்கடலை = 1/4 கப்பு
ஏலக்காய் தூள் = 2 ஸ்பூன்
செய்முறை : 1
முதலில் பச்சரிசியை தண்ணீரில் கழுவி, 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி ஈர அரிசி மிஷினில் அரைக்கவும். தேங்காய் மற்றும் பொட்டுகடலையை பொடியாக அறைத்து வைக்கவும்.
செய்முறை : 2
கடாயில் வெல்லத்தை போட்டு அதனுடன் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். பாகில் அரைத்து வைத்த பச்சரிசி மாவை கொஞ்சம், கொஞ்சமாக கொட்டி கிளறவும். இதனுடன் பொட்டுக்கடலை மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
செய்முறை : 3
கிளரிய மாவு கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் தயாராக வைத்துள்ள மாவு உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
இப்போது சூடான ( Seedai recipe ) இனிப்பு சீடை ரெடி !!!
Share this post
Lucky Club Casino site | 100% Welcome Bonus up to
பதிலளிநீக்குLucky Club Casino: luckyclub.live All about the gaming, entertainment, and gaming industry. Play a world of gambling games and join Lucky Club. Enjoy bonuses on our