புளி சாதம் ( Puliyodharai )
சாதம் வகைகளில் புளி சாதம் மட்டுமே வீட்டுக்கு வீடு தனி ருசியிலும் தனி ஸ்டைல் லிலும் இருக்கும். நம்ம ஊரு ஸ்டைல் ல் புளி சாதம் ( Puliyodharai ) செய்து பாக்கலாம் வாங்க :
தேவையான பொருட்கள் :
கடலை பருப்பு = 50 கிராம்
உளுத்தம் பருப்பு= 50 கிராம்
புலி = 20 கிராம்
நல்லெண்ணெய் = 100 மில்லி
பெருங்காயம் தூள் = 1 ஸ்பூன்
வெந்தயம் = 1/2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
மஞ்சள் தூள் = 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை = சிறிய கொத்து
கடுகு = 1/2 ஸ்பூன்
வறுகடலை = 100 கிராம்
செய்முறை : 1
முதலில் அரிசியை நன்கு வேகவைத்து, அகலமான பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இதனுடன் சிறிது எண்ணெய் கலந்து ஆறவைக்கவும். கடாயில் வெந்தயம் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு வறுத்து மிக்ஸியில் அரைத்து பொடி செய்து வைக்கவும்.
செய்முறை : 2
ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு சேர்த்து லேசாக வறுக்கவும். இவை சிவந்ததும் மிளகாய்வற்றல், கருவேப்பிலை ஆகியவற்றுடன் நல்லெண்ணெய் ஊற்றி வதக்கவும். இதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து, புளியைக் கரைத்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
செய்முறை : 3
அனைத்தும் வற்றி, எண்ணெய் தெளிந்ததும் கீழே இறக்கி, வடித்து வைத்த சாதத்துடன் வெந்தயம், பெருங்காய பொடியையும், புளி கலவையையும் சேர்த்து நன்கு கிளறவும், இப்போது சுவையான புளி சாதம் தயார்!!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...