Menu

2021-11-24

வரகு அரிசி முறுக்கு Murukku recipe, Varagu arisi murukku

 வரகு அரிசி முறுக்கு

சிறு தானிய வகைகளில் ஒன்றான, வரகு உடலுக்கு நன்மை தருவதோடு, சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் பெரிதும் உதவுகிறது. இத்தகைய வரகு வை பயன்படுத்தி வரகு அரிசி முறுக்கு ( Murukku recipe ) செய்யலாம் வாங்க :

Murukku recipe, Varagu arisi murukku
 Lemon tea, lemon tea recipe in tamil

தேவையான பொருட்கள் : 

வரகு அரிசி             = 1 கப்பு நிறைய 
சீரகம்                         = 1/2 ஸ்பூன் 
பெருங்காயம்       = 1/2 ஸ்பூன் 
வெண்ணெய்        = 1 ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு = 1/4 கப்பு 
பொட்டுக்கடலை = 1/4 கப்பு 
எள்                               = 2 ஸ்பூன் 
எண்ணெய்             = தேவையான அளவு 
உப்பு                           = தேவையான அளவு 

செய்முறை : 1 

                    முதலில் வரகு அரிசி,  உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து பின்னர் மிக்ஸியில் தனியாக அரைத்து வைக்கவும்.  பொட்டுகடலையும் இதேபோல அரைத்து வைக்கவும். 
இவை மூன்றையும் சலித்து எடுத்து வைக்கவும். 

செய்முறை : 2 

                   சலித்து வைத்த மூன்று மாவுடன் எள், சீரகம், பெருங்காயம், வெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு, கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில்  பிசைந்து, முறுக்கு பிழியும் அச்சில் வைத்து தயாராக வைக்கவும். 

செய்முறை : 3 

                        கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் கொதித்ததும் முறுக்கு அச்சில் தயாராக உள்ள மாவை பிழிந்து பொன்னிரமாகும்  வரை  பொரித்தெடுக்கவும். 

                        இப்போது சுட சுட Murukku recipe )  வரகு அரிசி முறுக்கு ரெடி !!!    



Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly