சீத்தாப்பழம் மகத்துவம்
எளிதாக கிடைக்கக்கூடிய சீத்தாப்பழத்தில் நம் உடலுக்கு தேவையான எண்ணற்ற சத்துக்கள் மற்றும் நன்மைகள் பற்றி ( Lemongrass benefits ) கீழே காண்போம் :
Lemongrass benefits, Seetha pazham uses and benefits
1. இதில் மக்னீசியம் இருப்பதால் இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இரத்த குழாய்களில் அடைப்பு ஏறப்படாமல் தடுக்கிறது.
2. இதில் உள்ள விட்டமின்கள் மூளை மற்றும் நரம்பு மண்டலம் சீராக செயல்பட உதவுகிறது.
3. சீத்தாப்பழத்தில் விட்டமின் A இருப்பதால், கண்கள், சருமம் மற்றும் தலைமுடி ஆகியவற்றை பாதுகாக்கிறது.
4. இது எளிதில் ஜூரணம் ஆவதோடு, மலச்சிக்கலை கட்டுப்படுத்துகிறது.
5. இதில் உள்ள தாமிரச்சத்து நம் ரத்தத்தில் உள்ள ஹிமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது.
6. சரும அலர்ஜு உள்ளவர்கள், சீத்தாப்பழத்தை பேஸ்ட் போல செய்து பாதிக்கப்பட்ட இடங்கள் மீது தேய்த்து வந்தால் பாதிப்பு சீக்கிரம் குணமாகும்.
7. தலையில் பேன் தொல்லை உள்ளவர்கள், சீத்தாப்பழ விதையை அரைத்து பேஸ்ட் போல செய்து தலையில் தேய்த்து குளித்தால் பேன் தொல்லை இருக்காது.
8. கர்பினி பெண்கள் தினம் ஒரு சீத்தாப்பழம் சாப்பிடுவதால் தாய்க்கும், குழந்தைக்கும் நல்ல சத்து கிடைக்கிறது.
9. கர்ப்ப காலத்தில் ரத்த சோகையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சீத்தாப்பழம் ஒரு நல்ல ரத்த ஊக்கியாக செயல்படுகிறது.
10. சீத்தாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் தசைகளுக்கு வலு ஏற்ப்படுத்துகிறது.
11. இது உடலுக்கு குளிர்ச்சி அளித்து, உடல் உஷ்ணத்தை குறைக்கிறது.
12. இதிலுள்ள தாதுப்புகள் மற்றும் விட்டமின்கள் குடல் புண்களை குணப்படுத்துகிறது, ஈறு மற்றும் பற்கள் பிரச்சனையை சரி செய்கிறது.
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...