Menu

2021-11-24

சிக்கன் வறுவல் Chicken fry recipes, tamil chicken recipes, how to make chicken fried

 சிக்கன் வறுவல் (Chicken fry recipes)

சிக்கனை வைத்து நிறைய சமயல் செய்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சிக்கன் வறுவல் க்கு தனி இடம் உண்டு, ருசியான சிக்கன் வறுவல் ( tamil chicken recipes ) செய்யலாம் வாங்க :



தேவையான பொருட்கள் :

 கோழி கறி                = ஒரு கிலோ
 எண்ணெய்              =   100 மில்லி 
மஞ்சள் பொடி         = 1/2  ஸ்பூன்
 உப்பு                           = தேவையான அளவு 
மிளகாய்த்தூள்       =  3 ஸ்பூன் 
பெரிய வெங்காயம் = 1 பீஸ் 
கொத்தமல்லி தழை = சின்ன கொத்து 

செய்முறை : 1 

முதலில் கோழிக் கறியை நன்றாக சுத்தம் செய்து, தேவைக்கேற்ப சிறிய துண்டுகளாக நறுக்கி, நறுக்கிய கோழிக்கறி துண்டில் மஞ்சள் பொடியை சேர்த்து நன்கு பிரட்டி, அதனுடன் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். கறி நன்கு வெந்ததும் கீழே இறக்கி தண்ணீரை வடிகட்டி வைக்கவும். 

 செய்முறை : 2 

வேகவைத்த கறியுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும். இதனை அப்படியே சிறிது நேரம் ஊற வைக்கவும். 

 செய்முறை : 3 

கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். எண்ணெய்  நன்கு சூடு ஏறியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, சேர்த்த கறித்துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னி றமாகும்  வரை நன்கு    வறுக்கவும்.  பிறகு பாத்திரத்தில் எடுத்து வெங்காயம் மற்றும் நறுக்கிய  கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

இப்போது சுட சுட சிக்கன் வறுவல் ( Chicken fry recipes ) தயார் !!!



Share this post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly