Menu

2021-10-15

பலாப்பழ பாயாசம் Jackfruit sweet recipe, jackfruit payasam

 பலாப்பழ பாயாசம்  

பலாப்பழத்தை வைத்து எளிமையாக பாயாசம் ( jackfruit payasam ) செய்யலாம் வாங்க :

பலாப்பழ பாயாசம்  Jackfruit sweet recipe, jackfruit payasam
  Jackfruit sweet recipe, jackfruit payasam

  
தேவையான பொருட்கள் : 

பலாப்பழம்             = 1 கப்பு நிறைய 
நெய்                            = 25 மில்லி 
முந்திரி,திராட்சை = 100 கிராம் 
ஏலக்காய்                 = 10 பீஸ் 
தேங்காய்                 = 1 பீஸ் 
வெல்லம்                  = 1 கப்பு நிறைய 

செய்முறை : 1 

                    முதலில் பலாப்பழத்தின் கொட்டைகளை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். தேங்காயை துருவி, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து தேங்காயப்பால் தயார் செய்து வைக்கவும். 

செய்முறை : 2 

                           ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும், தண்ணீர் கொதித்ததும் நறுக்கி வைத்த பலாப்பழ துண்டுகளை சேர்க்கவும். பலாப்பழம் நன்கு வெந்ததும் அதனுடன் வெல்லம் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும். வெல்லம் முழுவதும் கரைந்ததும், தயாராக உள்ள தேங்காயப்பாலை சேர்த்து 15 நிமிட வரை கொதிக்கவைக்கவும்.  

செய்முறை : 3 

                               இப்போது நன்கு வாசனை வரும் வேளையில் நெய் ஊற்றி லேசாக கிளரவும் பின் முந்திரி, திராட்சை, ஏலக்காய் சேர்த்து கிளறி இறக்கவும். 

                                    இப்போது சுட சுட பலாப்பழ பாயாசம் தயார் !!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly