Menu

amazon.in

2021-07-22

மாங்காய் ஊறுகாய் Recipe of mango pickle

 மாங்காய் ஊறுகாய் 

ஊறுகாய் என்றாலே முதலில் மாங்காய் ஊறுகாய் தான் ஞாபகம் வரும் , நினைக்கும்போதே எச்சில் ஊரும் நம்ம ஊரு மாங்காய் ஊறுகாயை ( Recipe of mango pickle ) ஈசியா செய்யலாம் வாங்க : 

மாங்காய் ஊறுகாய் Recipe of mango pickle
 Recipe of mango pickle

தேவையான பொருட்கள் : 

மாங்காய்              = 3 பெரிய பீஸ் 
பெருங்காய தூள் = சிறிதளவு 
மஞ்சள் தூள்        = 1 ஸ்பூன் 
நல்லெண்ணெய்  = தேவையான அளவு 
மிளகாய் தூள்    = தேவையான அளவு 
வெந்தயம்            = 1/2 ஸ்பூன் 
உப்பு                       = தேவையான அளவு 
கடுகு                           = 1 ஸ்பூன் 

செய்முறை : 1 

                முதலில் மாங்காயை சுத்தம் செய்து, தேவைக்கேற்ப சிறிய தூண்டுகளாக நறுக்கி வைக்கவும். மாங்காயை நீர் வற்றும் வரை வெயிலில் காயவைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அதில் வெந்தயம், மஞ்சள் தூள், பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். வறுத்த பின் சிறிது நேரம் ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கவும். 

செய்முறை : 2 

                      மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய்  காய்ந்ததும், கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும், காயவைத்த மாங்காயை போட்டு  அதனுடன் அரைத்து வைத்த பொடி மற்றும் தேவையான அளவு உப்பு, மிளகாய்தூள் சேர்த்து கிளறவும். மாங்காய் நன்கு வதங்கி அனைத்து பொருட்களுடன் கலந்ததும் இறக்கி ஆறவைத்து பரிமாறலாம். 

                        மாங்காய் ஊறுகாய் கெடாமல் இருக்க அடிக்கடி வெயிலில் வைத்து எடுத்தால் சீக்கிரம் கெடாமல் ருசியாக இருக்கும். 

                          இப்போது ருசியான மாங்காய் ஊறுகாய்  ( Recipe of mango pickle )  ரெடி !!!     



Share this post                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

மாம்பழ கேசரி Kesari Sweet, Mango Kesari In Tamil,How To Make Kesari Recipe

மாம்பழ கேசரி முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், இதில் சுவை மட்டுமல்லாமல், எண்ணற்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லோரும் விரும்பி சாப்பிடும் மாம்ப...