Menu

2021-07-22

கருவேப்பிலை துவையல் karuveppilai thuvaiyal, curry leaves

 கருவேப்பிலை துவையல்

அதிக சத்துக்கள் நிறைந்த கருவேப்பிலை ( curry leaves ) பயன்படுத்தி அருமையான துவையல் செய்யும் முறை :

கருவேப்பிலை துவையல் karuveppilai thuvaiyal, curry leaves
 karuveppilai thuvaiyal, curry leaves 

தேவையான பொருட்கள் : 

கருவேப்பிலை = 1 கட்டு  
வர மிளகாய்          = 6 பீஸ் 
உப்பு                           = தேவையான அளவு 
சின்ன வெங்காயம் = 1/2 கப்பு 
கடுகு, உளுந்து      = 1 ஸ்பூன் 
பெருங்காயதூள்  = சிறிதளவு 
எண்ணெய்              = தேவையான அளவு 
புளி                              = சிறிய உருண்டை 

செய்முறை : 1 

                    முதலில் கருவேப்பிலை இலையை தனியாக பிரித்து எடுக்கவும், சின்னவெங்காயத்தை உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலை இலையை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். பிறகு அதனுடன் வரமிளகாய், புளி,தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும். 

செய்முறை : 2 

                            கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயதூள் சேர்த்து தாளித்து, அரைத்து வைத்த கருவேப்பிலை கலவையுடன் சேர்த்து கலக்கவும். இப்போது சுவையான கருவேப்பிலை துவையல் தயார் !!! 

                            கருவேப்பிலை துவையல் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம், இட்லிக்கு அருமையாக இருக்கும். 



Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly