Menu

2021-07-22

வாழைக்காய் பஜ்ஜி Bajji recipe , Easy bajji recipe in tamil

வாழைக்காய் பஜ்ஜி

டீ கடை சுவையில் சுலபமாக பஜ்ஜி ( Bajji recipe ) செய்யலாம் வாங்க :

வாழைக்காய் பஜ்ஜி Bajji recipe , Easy bajji recipe in tamil
 Bajji recipe , Easy bajji recipe in tamil 

தேவையான பொருட்கள் : 

கடலை மாவு             = 1/4 கிலோ 
வாழைக்காய்          = 2 பீஸ் 
எண்ணெய்               = தேவையான அளவு 
உப்பு                             = தேவையான அளவு 
கேசரி பவுடர்           = சிறிதளவு 
மிளகாய் தூள்         = 1 ஸ்பூன் 
அரிசி மாவு                   = 2 ஸ்பூன் 
பெருங்காயம்              = 1/2 ஸ்பூன் 

செய்முறை : 1 

                     முதலில் வாழைக்காயை மெல்லியதாக சீவி, தனியாக எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவை கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசையவும். பின்னர் இதில் அரிசி மாவு, மிளகாய் தூள், பெருங்காயம், கேசரி பவுடர், ஆகியவற்றை சேர்த்து, கட்டியில்லாமல் நன்கு கலக்கவும். இப்போது பஜ்ஜிமாவு தயார். 

செய்முறை : 2 

                          கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடேறியதும் கலந்து வைத்த பஜ்ஜி மாவில், சீவி வைத்த வாழக்காயை நன்கு முக்கி எடுத்து, எண்ணெயில் போட்டு வேகவைத்து எடுக்கவும். 

                            இப்போது சூடான பஜ்ஜி ரெடி !!! பஜ்ஜி மாவில் வாழைக்ககாய்க்கு பதிலாக, சீவிய பெரிய வெங்காயம், உருளைகிழங்கு, மேரி பிஸ்கட் ஆகியவற்றை பயன்படுத்தலாம். 



Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly