Menu

2021-06-05

கோதுமை தோசை Wheat dosa recipe in 15 minutes

 கோதுமை தோசை ( Wheat dosa recipe )

இது சாதாரண கோதுமை தோசை போல் இல்லாமல் கூடுதல் சுவையாக இருக்கும். 15 நிமிடத்தில் ஈசியாக கோதுமை தோசை செய்யும் முறை :

கோதுமை தோசை Wheat dosa recipe in 15 minutes
 Wheat dosa recipe in 15 minutes 

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு     = 1 கப்பு 
ரவை                             = 1 கைப்பிடி 
கடுகு                             =1 ஸ்பூன் 
காய்ந்த மிளகாய்  = 4 பீஸ் 
கருவேப்பிலை        = 1 சின்ன கொத்து 
மிளகு                            = 1 ஸ்பூன் 
பச்சைமிளகாய்      = 2 பீஸ் 
வெங்காயம் நறுக்கியது = 1 கப்பு 
தயிர்                               = 2 ஸ்பூன்        
உப்பு                               = தேவையான அளவு 

செய்முறை : 1

                முதலில் கோதுமை மாவில் ரவை, மிளகு நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சேர்க்கவும். பிறகு தேவையான அளவு உப்பு, தயிர் மற்றும்  தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்க்கு கரைத்துக்கொள்ளவும். 

செய்முறை : 2 

                கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். தாளித்தவற்றை கரைத்துவைத்த தோசை மாவில்  சேர்த்து கலக்கவும். இறுதியில் தோசை கல்லை அடுப்பில் வைத்து சாதாரண தோசை ஊத்துவது போல ஊற்றி, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். 

                        இப்போது சுவையான ஆரோக்கியமான கோதுமை தோசை  ( Wheat dosa recipe ) தயார் !!! 



Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly