வான்கிபாத் சாதம்
பொதுவாக கத்திரிக்காய் சாதத்தை தான் வான்கிபாத் என்று கூறுவார்கள், மசாலா பிரியர்களுக்கு ரொம்ப பிடித்தமான சாதம், ஈசியாக வான்கிபாத் ( vangi bath recipe ) செய்யலாம் வாங்க :
தேவையான பொருட்கள் :
கத்திரிக்காய் = 1/2 கிலோ
மஞ்சள் தூள் = 1 ஸ்பூன்
புளி = 1 சிறிய உருண்டை
உப்பு = தேவையான அளவு
கடலை பருப்பு = 4 ஸ்பூன்
கடுகு = 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் = 4 பீஸ்
கருவேப்பிலை = 1 சின்ன கொத்து
தனியா = 6 ஸ்பூன்
மிளகாய் = 4 பீஸ்
பெருங்காயம் = 1/4 ஸ்பூன்
பட்டை = 2 பீஸ்
மஞ்சள் தூள் = 1 ஸ்பூன்
புளி = 1 சிறிய உருண்டை
உப்பு = தேவையான அளவு
கடலை பருப்பு = 4 ஸ்பூன்
கடுகு = 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் = 4 பீஸ்
கருவேப்பிலை = 1 சின்ன கொத்து
தனியா = 6 ஸ்பூன்
மிளகாய் = 4 பீஸ்
பெருங்காயம் = 1/4 ஸ்பூன்
பட்டை = 2 பீஸ்
செய்முறை : 1
கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் கடலை பருப்பு கொஞ்சம், தனியா, மிளகாய், பட்டை ஆகியவற்றை வறுத்து, மிக்ஸியில் அரைத்து வைக்கவும். கத்திரிக்ககாயில் உப்பு, மஞ்சள் தூள், புளிக்கரைசல் ஆகியவற்றை சேர்த்து பிசறி 10 லிருந்து 15 நிமிடம் வரை வைத்து, தண்ணீரில் அலசி பிழிந்து வைக்கவும்.
செய்முறை : 2
கடாயில் கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் மற்றும் கடலை பருப்பை தாளித்து பிழிந்து வைத்த கத்திரிக்காயையும் சேர்த்து வதக்கவும். உப்பு, மஞ்சள் தூள் போட்டு கத்திரிக்காய் சுருளும் வரை நன்கு வதக்கவும்.
செய்முறை : 3
கத்திரிக்காய் வெந்து வதங்கியதும், ஏற்க்கனவே அரைத்துவைத்த மசாலா பொடியை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும். இறுதியில் வடித்து வத்த சாதத்தில் இந்த கத்திரிக்காய் மசாலா கலவையை சேர்த்து நன்கு கிளறவும். சாதத்தின் மேலே கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
இப்போது சுவையான வான்கிபாத் சாதம் ( vangi bath recipe ) தயார் !!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...