தக்காளி சட்னி
இட்லி, தோசைக்கு டேஸ்ட்டான தக்காளி சட்னி ( Tomato chutney recipes ) ஈசியாக செய்யும் முறை :
வெங்காயம் = 4 பீஸ்
வர மிளகாய் = 10 பீஸ்
புளி = சிறிய உருண்டை
உப்பு = தேவையான அளவு
எண்ணெய் = தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
பெருங்காயம் = சிறிதளவு
கருவேப்பிலை = 1 சின்ன கொத்து
செய்முறை : 1
முதலில் வாணலியில் தக்காளி, வெங்காயம், வரமிளகாய், புளி ஆகியவற்றை பச்சைவாசம் போகும்வரை நன்கு வதக்கவும். வதக்கிய பிறகு ஆரவைக்கவும். ஆறியதும் அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
செய்முறை : 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுடன் பெருங்காயம் சேர்த்து அரைத்து வைத்துள்ள தக்காளி சட்னியில் சேர்த்து கிளறவும்.
இப்போது ருசியான தக்காளி சட்னி ( Tomato chutney recipes ) தயார் !!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...