Menu

2021-06-05

ஓம முறுக்கு Murukku recipe

 ஓம முறுக்கு Murukku recipe

கேரளாவின் புகழ் பெற்ற ஓம முறுக்கு வீட்டிலேயே சுலபமாக  ( Murukku recipe ) செய்யும் முறை :

ஓம முறுக்கு Murukku recipe
 Murukku recipe

தேவையான பொருட்கள் :

பச்சரிசி                         = 1 கிலோ 
உளுந்து                          = 200 கிராம் 
ஓமம்                                = 25 கிராம் 
எள்ளு                               = 25 கிராம் 
தேங்காய் எண்ணெய் = தேவையான அளவு 
உப்பு                                 = தேவையான அளவு 
டால்டா                            = 100 கிராம் 

செய்முறை : 1 
            
                    முதலில் அரிசியில்  தண்ணீர் ஊற்றி களைந்து, நிழலில் உலர வைக்கவும். உளுந்தை லேசாக வறுத்து, அரிசியுடன் கலந்து அரைத்து வைக்கவும். எள் மற்றும் ஓமம் இரண்டையும் லேசாக வறுக்கவும். 

செய்முறை : 2 

                        வறுத்து வைத்த ஓமம், எள் மற்றும் டால்டாவையும்  மாவுடன் கலந்துகொள்ளவும். தண்ணீரை தனியாக கொதிக்கவைத்து, அதில் பெருங்காயமும் தேவையான அளவு உப்பும் சேர்த்து கலக்கவும். இந்த தண்ணீரை மாவுடன் கொஞ்சம், கொஞ்சமாக  சேர்த்து இடியாப்ப மாவு பதத்திற்க்கு பிசைந்து வைக்கவும். 

செய்முறை : 2 

                            கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி,எண்ணெய் காய்ந்ததும் பிசைந்து வைத்த மாவை முறுக்கு பிழியும் அச்சில் வைத்து பிழிந்து, மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். 

                                இப்போது சுவையான சத்தான ஓம முறுக்கு ( Murukku recipe ) தயார் !!!




Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly