மசால் தோசை( Masala dosa,Dosa recipe )
காலை உணவிற்க்கு அருமையான மசால் தோசை செய்யும் முறை :
தேவையான பொருட்கள் :
உளுந்து = 1/4 கிலோ
வெந்தயம் = 2 ஸ்பூன்
உருளை கிழங்கு = 1/4 கிலோ
வெங்காயம் = 1 பீஸ்
உப்பு = தேவையான அளவு
மஞ்சள் தூள் = 1/2 ஸ்பூன்
பச்சைமிளகாய் = 2 பீஸ்
செய்முறை : 1
முதலில் அரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து தனியாக நற நறப்பாக அரைக்கவும். உளுந்து மற்றும் வெந்தயம் இரண்டையும் தண்ணீரில் ஊற வைத்து தனியாக அரைக்கவும். அரைத்த அரிசியை, அரைத்த உளுந்து மற்றும் வெந்தய மாவுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கரைக்கவும்.
செய்முறை : 2
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்து வைக்கவும். வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கி, வெங்காயம் வதங்கியதும் உருளை கிழங்கை சேர்த்து மசிக்கவும். மஞ்சள் தூள் தூவி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கேட்டியானதும் இறக்கவும்.
செய்முறை : 3
தோசை கல்லை காயவைத்து, தோசை ஊற்றி அதன்மேல் தயாராக வைத்துள்ள மசாலாவை தடவி, வேகவைத்து எடுக்கவும்.
இப்போது சுவையான, மசால் தோசை ( Masala dosa,Dosa recipe ) தயார் !!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...